ஐந்து வருடங்களில் இது என் மூன்றாவது புராஜெக்ட் - நடிகை கங்கனா
|சந்திரமுகி -2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'சந்திரமுகி 2' படப்பிடிப்பிற்காக தயாராகும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இவர் 'ஐந்து வருடங்களில் 'சந்திரமுகி 2' எனது மூன்றாவது புராஜெக்ட்' என்று பதிவிட்டுள்ளார்.