< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
தனுஷ் படவிழாவுக்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்
|5 Aug 2022 2:36 PM IST
நடிகை நித்யா மேனன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டதால் தனுஷ் படவிழாவுக்கு வீல் சேரில் வந்திருந்தார்.
நித்யா மேனன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டார். அவர் ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த ஒரு தெலுங்கு படவிழாவுக்கு வீல் சேரில் வந்தார். அதேபோல் சென்னையில் நடந்த தனுஷ் படவிழாவுக்கும் நித்யாமேனன் வீல் சேரில் வந்தார்.
பொதுவாக மற்ற நடிகைகள் இதுபோல் கால் எலும்பை முறித்துக் கொண்டால், விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பார்கள். நித்யா மேனன் கால் எலும்பு முறிந்த நிலையில், துணிச்சலுடன் பட விழாவுக்கு வீல் சேரில் வந்திருந்தார்.
நிறைய பேர் அவரை நேரில் வாழ்த்தினார்கள். முக்கிய நடிகர்-நடிகைகள் சிலர் போனில் வாழ்த்தினார்கள். இதுபற்றி நித்யா மேனன் கூறும்போது, 'நீங்க இல்லாமல் எப்படி? வீல் சேரிலாவது வரவேண்டும்' என்று தனுஷ் கேட்டுக்கொண்டார். அதனால்தான் இந்த விழாவுக்கு வந்தேன்" என்றார்.