< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
கலை குடும்பத்தின் அடுத்த வாரிசு
|5 May 2023 1:11 PM IST
எடிட்டர் மோகனின் மகன்கள் ஜெயம் ராஜா இயக்குனராகவும், ஜெயம் ரவி நடிகராகவும் இருக்கிறார்கள். இதில் இயக்குனர் ஜெயம் ராஜாவின் மகன் பிரணவ் மோகனும் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'தமிழரசன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். படத்தில் அவரது நடிப்பு மெச்சும்படி இருப்பதாக பாராட்டுக்கள் கிடைக்க மோகன் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். கலை குடும்பத்தின் அடுத்த வாரிசு தயார்.