< Back
சினிமா துளிகள்
வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்
சினிமா துளிகள்

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
1 July 2022 11:17 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு'. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் செப்டெம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டெம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படம் குறித்து புதிய தகவலை தனது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மொஸார்ட் ஆஃப் தி மெட்ராஸ் ஏ.ஆர் ரஹ்மானை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் எளிமை கண்டு வியந்தேன். வெந்து தணிந்தது காடு படம் குறித்து நிறைய பேசினோம். ரசிகர்களுக்கான சிறப்பான இசை விருந்து வந்து கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்