"லவ் டுடே" செய்த மாயம்.. "தளபதி 68"-யில் இணையும் இளம் நடிகை
|விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தளபதி 68' படத்தில் 'லவ் டுடே' படத்தின் கதாநாயகி இவானா, விஜய்யின் தங்கையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'தளபதி 68' படத்தின் கதாபாத்திரங்கள் முன்பே வெளியான நிலையில், இவானா இந்த படத்தில் இணையவுள்ளதாக பரவி வரும் செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.