சினிமா துளிகள்
சினிமா துளிகள்
நடிகர் கிஷோருடன் 'டூப்' இல்லாமல் சண்டை போட்ட குங்பூ மாஸ்டர்
|2 Sept 2022 3:02 PM IST
வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான கிஷோர், ‘மஞ்சக் குருவி’ என்ற படத்தில் கதைநாயகனாக நடித்து வருகிறார்.
கதை நாயகிகளாக புதுமுகங்கள் விஷ்வா, நீரஜா நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, 'கோலி சோடா' பாண்டி, 'பருத்தி வீரன்' சுஜாதா, செந்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வில்லனாக நடிக்கும் ராஜநாயகம், ஒரு குங்பூ மாஸ்டர். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குங்பூ வீரர்களை உருவாக்கி இருக்கிறார். 'மஞ்சக்குருவி' படத்துக்காக ராஜநாயகம் தொடர்பான ஒரு ஆபத்தான சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அதை 'டூப்' நடிகரை வைத்து படமாக்கலாம் என்று ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா கூறினார். அதற்கு மறுத்ததுடன், அந்த சண்டை காட்சியில் ராஜநாயகமே துணிச்சலுடன் நடித்தார். அவரை கிஷோர் கட்டிப்பிடித்து பாராட்டினார்.
இந்தப் படத்துக்கு சவுந்தர்யன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி அரங்கன் சின்னதம்பி டைரக்டு செய்கிறார்.