< Back
சினிமா துளிகள்
33-வது ஆண்டில் தங்கர் பச்சான்...!
சினிமா துளிகள்

33-வது ஆண்டில் தங்கர் பச்சான்...!

தினத்தந்தி
|
18 Aug 2023 2:04 PM IST

1990-ம் ஆண்டில் வெளியான 'மலைச் சாரல்' படத்தில் ஒளிப்பதிவாளராக திரைப்பயணத்தை தொடங்கிய தங்கர் பச்சான், இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தினார். 'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'தென்றல்', 'பள்ளிக்கூடம்' உள்ளிட்ட பல காவியங்களை கொடுத்தவர். இவரது 'கருமேகங்கள் கலைகின்றன' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தங்கர் பச்சான் சினிமாவில் தனது 33-வது ஆண்டில் அடையெடுத்து வைத்துள்ளார். அவருக்கு நடிகர்-நடிகைகள் உள்பட திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்