< Back
சினிமா துளிகள்
சோதனை மேல் சோதனை.. வெறுப்பின் உச்சத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்
சினிமா துளிகள்

சோதனை மேல் சோதனை.. வெறுப்பின் உச்சத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்

தினத்தந்தி
|
17 Nov 2023 10:15 PM IST

விஜய் சேதுபதி பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.

பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மேரி கிறிஸ்துமஸ்'. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். 'மேரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு முன்பே அறிவித்து பின்னர் டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, 'மேரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. கத்ரீனா கைஃப் - விஜய் சேதுபதியின் கெமிஸ்ட்ரியை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் இதனால் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்