நிதின் சத்யா போன்ற ஆட்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை - நடிகர் மஹத்
|இயக்குனர் அரவிந்த இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”. இந்த படத்தில் மஹத் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கண்டிசன்ஸ் அப்ளை". நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் வழங்கும் இந்த படத்தில் சனா மகுல், விவேக் பிரசன்னா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மஹத் கூறியதாவது, "இது எனது 16- வது படம், ஆனால் ஹீரோவாக முதல் படம். எனது நண்பர் நிதின் சத்யா, கோவிட் காலத்தில் என்னை அணுகி படம் பண்ணலாம் என்று கூறினார். இயக்குனர் அரவிந்த் உடன் பல ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன், அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி.
இசையமைப்பாளர் ரமேஷ் இந்த படத்தில் அறிமுகமானது எனக்கு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரும் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளனர். இந்த படம் பொருளாதார சிக்கலில் சிக்கி இருந்த போது, ரவீந்தர் தான் உதவினார். அவருக்கு எனது நன்றிகள். நிதின் சத்யா, ரவீந்தர் போன்ற ஆட்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. அனைவருக்கும் நன்றிகள்."