< Back
சினிமா துளிகள்
சூரிக்கு கிடைத்தது விடுதலை.. படப்பிடிப்பு நிறைவு..
சினிமா துளிகள்

சூரிக்கு கிடைத்தது 'விடுதலை'.. படப்பிடிப்பு நிறைவு..

தினத்தந்தி
|
2 Jan 2023 10:41 PM IST

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

சமீபத்தில் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு.. என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடுதலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை சூரி தனது இணையப்பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்