< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
சூர்யாவுக்கு பொருத்தமான ஜோடி
|21 April 2023 10:59 AM IST
சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது `சினிமாவில் சூர்யாவுக்கு சூப்பரான ஜோடி யார்?' என்று ஜோதிகா விடம் கேட்கப்பட்டது. இதற்கு உடனே, `லைலா மட்டும்தான். 'உன்னை நினைத்து', 'நந்தா', 'பிதாமகன்', 'மவுனம் பேசியது' போன்ற படங்களில் இவர்கள் ஜோடி பொருத்தம் அருமையாக அமைந்திருந்தது. அதேவேளை 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். கணவராக இருந்தாலும் திரையில் ஒரு நடிகராகவே அவரை நான் ரசிக்கிறேன்' என ஜோதிகா கூறினார்.