< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
ஒரே படத்தில் எகிறிய சம்பளம்
|28 April 2023 1:13 PM IST
'சீதா ராமம்' என்ற ஒரே படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் மிருணாள் தாகூரின் மவுசு கூடியிருக்கிறது. மராத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் நானியின் 30-வது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'சீதா ராமம்' படத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய மிருணாள் தாகூர், புதிய படத்துக்காக ரூ.6 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். ஒரே படத்தின் மூலம் முன்னணி நடிகைகளுக்கு இணையாக அவர் சம்பளத்தை உயர்த்தியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.