< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
அயலான் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் பெருமை
|24 Nov 2023 11:33 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'அயலான்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு புதிய பெருமை கிடைத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.