< Back
சினிமா துளிகள்
தீபாவளிக்கு வெளியாகும் ஷங்கர் படத்தின் முதல் பாடல்
சினிமா துளிகள்

தீபாவளிக்கு வெளியாகும் ஷங்கர் படத்தின் முதல் பாடல்

தினத்தந்தி
|
25 Oct 2023 11:09 PM IST

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பாடலுக்காக ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்