< Back
சினிமா துளிகள்
அதிரடி ஆக்ஷன் காட்சியை படமாக்கும் ஷங்கர்
சினிமா துளிகள்

அதிரடி ஆக்ஷன் காட்சியை படமாக்கும் ஷங்கர்

தினத்தந்தி
|
12 July 2023 11:20 PM IST

இயக்குனர் ஷங்கர் தற்போது ’இந்தியன்- 2’, ‘கேம் சேஞ்ஜர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்குவதில் இயக்குனர் ஷங்கர் தீவிரம் காட்டி வருகிறார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்