< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
தொடர்ந்து அப்டேட்களை குவிக்கும் இயக்குனர் ஷங்கர்
|9 April 2023 10:12 PM IST
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2. இப்படத்தின் படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் -2 படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.