< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
'ஜவான்' படம், ஓடிடியில் ரூ.120 கோடிக்கு விற்பனை
|1 July 2022 5:35 PM IST
“ஜவான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் ஓடிடியில் இந்த படத்தை வெளியிடுவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் முன்வந்து 120 கோடி கொடுத்து இந்த படத்தின் ஓ.டி.டி.உரிமையை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கி வரும் 'ஜவான்' (இந்தி) படத்தில் ஷாருக்கான், நயன்தாரா இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக தொடர்ந்து நடக்கிறது. படத்தை தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்த பின், ஓ.டி.டி.க்கு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். ஒரு ஓ.டி.டி. நிறுவனம், 'ஜவான்' படத்தை ரூ.120 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம்.