< Back
சினிமா துளிகள்
வைரலாகும் செல்வராகவன் பட போஸ்டர்
சினிமா துளிகள்

வைரலாகும் செல்வராகவன் பட போஸ்டர்

தினத்தந்தி
|
30 Jun 2022 4:44 PM GMT

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கும் அடுத்த திரைப்படம் பகாசூரன். இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடிக்கிறார்.

'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வாக்கியத்தோடு மகாபாரத புத்தகம் இடம்பெற்றிருக்கும் இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் புதிய போஸ்டரை செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வித்தியாசமான முகத்தோற்றத்துடன் பகாசூரன் கெட்டப்பில் செல்வராகவன் தோன்றியுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்