< Back
சினிமா துளிகள்
நகைச்சுவை படத்தில் சந்தானம் ஜோடியாக தான்யா ஹோப்
சினிமா துளிகள்

நகைச்சுவை படத்தில் சந்தானம் ஜோடியாக தான்யா ஹோப்

தினத்தந்தி
|
2 Sept 2022 2:07 PM IST

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘கிக்’ என்று பெயரிட்டுள்ளார்கள். இது, முழு நீள நகைச்சுவை படம். படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கி, சென்னையில் சில நாட்கள் நடந்தது.

முக்கிய காட்சிகள் பாங்காக்கில் படமாக்கப்பட்டன. பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் டைரக்டு செய்கிறார். இவர் லவ் குரு, கானா பஜானா, விசில் ஆகிய கன்னட படங்களை இயக்கியவர்.

'கிக்' படத்தில் சந்தானம் ஜோடியாக தான்யா ஹோப் நடிக்கிறார். இவர், 'தாராள பிரபு' படத்தில் நடித்தவர். தம்பி ராமய்யா, பிரமானந்தம், ஒய்.ஜி.மகேந்திரன், செந்தில், மனோபாலா, வையாபுரி, மன்சூர் அலிகான், ஆகியோரும் நடிக்கிறார்கள். நவீன்ராஜ் தயாரிக்கிறார்.

"கதாநாயகனும், கதாநாயகியும் எலியும் பூனையுமாக அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை நகைச்சுவையாக படமாக்கி இருக்கிறோம்" என்கிறார், டைரக்டர் பிரசாந்த்ராஜ்.

மேலும் செய்திகள்