< Back
சினிமா துளிகள்
வேலூர் தங்க கோவிலில் நடிகை சினேகா குடும்பத்துடன் சாமி தரிசனம்
சினிமா துளிகள்

வேலூர் தங்க கோவிலில் நடிகை சினேகா குடும்பத்துடன் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
17 Oct 2023 10:27 PM IST

தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு சினேகா- பிரசன்னா தங்களது கைகளால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்தார். நடிகை சினேகா, பிரசன்னா ஆகியோர் பொற்கோவில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு பிரபல நடிகை சினேகா அவரது கணவர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்தார். அவர்கள் ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்தனர். தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தங்களது கைகளால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்தார். பின்னர் கோவிலை சுற்றி வலம் வந்து தரிசித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடிகை சினேகா, பிரசன்னா ஆகியோர் பொற்கோவில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு சக்தி அம்மா ஆசியளித்து, பிரசாதம் வழங்கினார். வேலூர் தங்க கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த சினேகா-பிரசன்னா குடும்பத்தினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் குடும்பத்துடன் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சினேகா வந்த செய்தி அனைவருக்கும் பரவியதால் கோவில் முன்பாக ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

தரிசனம் முடிந்த பின்னர் வெளியே வந்த சினேகா-பிரசன்னாவை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக வழிஅனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்