< Back
சினிமா துளிகள்
அல்லு அர்ஜுன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்?
சினிமா துளிகள்

அல்லு அர்ஜுன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்?

தினத்தந்தி
|
28 Jun 2022 2:07 PM IST

புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு, கதாநாயகி சமந்தா நடனம் ஆடி இருந்தார். புஷ்பா 2-ம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தாவை கவர்ச்சி நடனமாட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'புஷ்பா'. செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடினார். படத்தின் வெற்றிக்கு இந்த பாடலும் மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது.

தற்போது 'புஷ்பா-2' பட வேலைகள் தொடங்கப்பட இருக்கின்றன. முதல் பாகத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன் 2-ம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன்படி படப்பிடிப்பு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தொடங்குகிறது.

முதல் பாகத்தைப் போலவே 2-ம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தாவை கவர்ச்சி நடனமாட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி நடிகையும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செம்மரக்கட்டை கடத்தலில் தாதாவாக மாறும் அல்லு அர்ஜுன், எப்படி தனது ஆதிக்கத்தை வெளிநாடுகளிலும் செலுத்துகிறார்? என்பதே 'புஷ்பா-2' படத்தின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்