< Back
சினிமா துளிகள்
விஜய் ஜோடியாக நடிக்க ஆசை - சாய் பல்லவி
சினிமா துளிகள்

விஜய் ஜோடியாக நடிக்க ஆசை - சாய் பல்லவி

தினத்தந்தி
|
15 July 2022 4:03 PM IST

விஜய் ஜோடியாக நடிக்க தனக்கும் ஆசை இருக்கிறது என்று சாய் பல்லவி தெரிவித்து இருக்கிறார்.

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய்யுடன் நடிக்க கதாநாயகிகள் எப்போதுமே ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி ஷெட்டி, ராஷி கன்னா ஆகியோர் விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

இதில் ராஷ்மிகாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது. 'வாரிசு' படத்தில் விஜய் ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் ஜோடியாக நடிக்க தனக்கும் ஆசை இருக்கிறது என்று சாய் பல்லவி தெரிவித்து இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், "விஜய்யுடன் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது. நல்ல கதை அமைய வேண்டும். அந்தக் கதை அமைந்தால் அது நடக்கும். நிச்சயம் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது" என்கிறார்.

விஜய்யுடன் நடிக்க விருப்பப்படும் நடிகைகள் பட்டியலில் தற்போது புதிதாக சாய் பல்லவியும் இணைந்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்