நடிப்பு பயிற்சியில் ரோஜா மகள் அன்ஷு மாலிகா
|ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கும் நடிகை ரோஜா தனது மகள் அன்ஷு மாலிகாவை கதாநாயகியாக அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ரோஜா தமிழ், தெலுங்கு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் குணசித்திர நடிகையானார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். மந்திரியானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார்.
இந்த நிலையில் தனது மகள் அன்ஷு மாலிகாவை நடிகையாக்க தானே நடிப்பு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. நடனப் பயிற்சியும் பெற்று வருகிறார். ரோஜாவின் கணவரும், பிரபல டைரக்டருமான செல்வமணியும் அன்ஷு மாலிகாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கிறாராம். ஏற்கனவே தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் அன்ஷுவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னை அணுகியதாக ரோஜா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் படிக்க அன்ஷு மாலிகாவுக்கு இடம் கிடைத்துள்ளதாகவும், அங்கு சென்று நடிப்பு, இயக்குனர், திரைக்கதை எழுதுதல் போன்ற பயிற்சிகளை எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படிப்பை முடித்து நாடு திரும்பியதும் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.