தனுசுடன் இணைந்து நடிக்கும் நாகார்ஜுனா
|தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுசுடன் இணைந்து நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் தமிழ் படங்களை தாண்டி இந்தியிலும் 'ஷமிதாப்', 'ராஞ்சனா', 'அந்த்ராங்கிரே' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இன்னொரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரியும் தனுஷ் படத்தை இயக்கினார். இது தமிழில் வாத்தி, தெலுங்கில் 'சர்' என்ற பெயர்களில் வெளியானது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
அடுத்து தனது 50-வது படத்தில் தனுஷ் நடித்து அவரே டைரக்டும் செய்ய இருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு தனுஷ் நடிக்க உள்ள படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாகவும், இதில் தனுசுடன் இணைந்து நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாகார்ஜுனா தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். ராஷ்மிகா, சாய்பல்லவி ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.