< Back
சினிமா துளிகள்
ரஜினியை சந்தித்த லாரன்ஸ்
சினிமா துளிகள்

ரஜினியை சந்தித்த லாரன்ஸ்

தினத்தந்தி
|
31 Oct 2022 4:38 PM IST

தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரஜினியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ல் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் தற்போது நடித்து வருகிறார். பி.வாசு இயக்குகிறார். படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துள்ளது. ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை லாரன்ஸ் நேரில் சந்தித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தனது பிறந்த நாளையொட்டி ரஜினியிடம் லாரன்ஸ் வாழ்த்து பெற்றார்.

ரஜினியை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், ''என்னுடைய பிறந்த நாளில் தலைவர் மற்றும் குருவாகிய ரஜினி சாரிடம் வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஏதாவது சேவை செய்வேன். பசியின் முக்கியத்துவம் அறிந்துள்ளதால் இந்த ஆண்டு அன்னதானம், செய்ய திட்டமிட்டு உள்ளேன். நானே நேரடியாக சென்று என்னால் முடிந்தவரை உணவளிக்க இருக்கிறேன். எனக்கு அனைவரின் ஆசிர்வாதம் தேவை" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தனது அறக்கட்டளைக்கான பணத்தை நானே பார்த்துக்கொள்கிறேன், யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என்று லாரன்ஸ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்