< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
முதல்வராக பிரியாமணி
|4 Nov 2022 11:58 AM IST
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்தில் பிரியாமணி அரசியல்வாதியாக அவர் நடிப்பது மட்டும் இல்லாமல், இடைவேளைக்கு பிறகு பிரியாமணி முதல் மந்திரி ஆவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளார்களாம்.
'பருத்திவீரன்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி. இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெயரும் புகழும் பெற்றார். அதன் பிறகு சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்து விட்டு, இப்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்தில் பிரியாமணியும் இருக்கிறார். இதில் அரசியல்வாதியாக அவர் நடிப்பது மட்டும் இல்லாமல், இடைவேளைக்கு பிறகு பிரியாமணி முதல் மந்திரி ஆவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளார் களாம். பெண் முதல்வரால் ஆண்கள் செய்ய முடியாததை செய்து காட்ட முடியும், மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய முடியும் என்று அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்து உள்ளார்களாம்.