< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
பிரபல கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி
|24 March 2023 4:57 PM IST
இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார்.
லண்டன்,
பிரபல கர்நாடக இசைப் பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ, நிகழ்ச்சி நடத்துவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார். தற்போது அவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.