< Back
சினிமா துளிகள்
3 படங்கள் தோல்வி: கோவிலில் சிறப்பு பூஜை செய்த பூஜா ஹெக்டே
சினிமா துளிகள்

3 படங்கள் தோல்வி: கோவிலில் சிறப்பு பூஜை செய்த பூஜா ஹெக்டே

தினத்தந்தி
|
13 Jan 2023 3:57 PM IST

பூஜா ஹெக்டே, ஐதராபாத்தில் உள்ள பெத்தம்மா கோவிலில் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டார்.

தமிழில் ஜீவா ஜோடியாக 'முகமூடி' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவரது படங்கள் தொடர்ந்து நல்ல வசூல் பார்த்தன. இந்த நிலையில் கடந்த வருடம் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான 3 படங்கள் தோல்வி அடைந்தன.

பிரபாஸ் ஜோடியாக நடித்த ராதே ஷியாம் படத்தை அதிக செலவில் எடுத்து இருந்தனர். பெரும்பகுதி படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்தி இருந்தனர். இந்த படத்தின் தோல்வி பூஜா ஹெக்டேவுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்தியில் ரன்வீர் கபூடன் நடித்த சர்க்கஸ் படமும் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் பூஜா ஹெக்டே ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற பெத்தம்மா கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டார். அங்கு வேத பண்டிதர்களை சந்தித்து ஆசிர்வாதமும் பெற்றார். இந்த வருடம் அவர் நடிக்கும் படங்கள் வெற்றிபெற வேண்டி அம்மனை தரிசித்ததாக கூறுகின்றனர். கோவிலுக்கு வந்த பூஜா ஹெக்டேவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அவரோடு செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்