< Back
சினிமா துளிகள்
ரூ.200 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன் திரைப்படம்
சினிமா துளிகள்

ரூ.200 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன் திரைப்படம்

தினத்தந்தி
|
2 May 2023 11:25 PM IST

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.100 வசூல் குவித்ததாக அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வெளியான உலகம் முழுவதும் நான்கு நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்