< Back
சினிமா துளிகள்
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்
சினிமா துளிகள்

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
14 July 2022 10:14 PM IST

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் - 1 டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் சில காரணங்களால் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து படக்குழு நேற்று சமூக வலைதளத்தில் "நிகழ்ச்சியில் பட்டத்து இளவரசரை தவறவிட்டீர்களா? உங்களுக்கான சிறப்பு எங்களிடம் உள்ளது. அது இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, பொன்னியின் செல்வன் -1 படத்திற்காக நடிகர் விக்ரம் ஐந்து மொழிகளில் பின்னணி குரல் கொடுக்கும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்