< Back
சினிமா துளிகள்
அரசியலா... சினிமாவா...
சினிமா துளிகள்

அரசியலா... சினிமாவா...

தினத்தந்தி
|
23 Jun 2023 12:29 PM IST

`சென்னை-28', 'நாடோடிகள்', 'மங்காத்தா', 'நண்பன்', 'வேலைக்காரன்' போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த விஜய் வசந்த். தற்போது எம்.பி.யாக இருக்கிறார். இதற்கிடையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், 'மீண்டும் படங்களில் நடிப்பீர்களா?' என்று கேட்கப்பட்டது. அவர் பதிலளிக்கையில், ``தற்போது அரசியல் பணிக்கே நேரம் போதவில்லை. மக்கள் பணியில் கவனம் செலுத்துகிறேன். தந்தை விட்டுச்சென்ற கடமைகளை தொடர வேண்டும். அதெல்லாம் முடித்த பின்னர், நேரம் இருந்தால் பார்க்கலாம்'' என்றார்.

மேலும் செய்திகள்