< Back
சினிமா துளிகள்
மீண்டும் கதாநாயகனாக பாண்டியராஜன்
சினிமா துளிகள்

மீண்டும் கதாநாயகனாக பாண்டியராஜன்

தினத்தந்தி
|
26 July 2022 2:37 PM IST

கார்த்திக் சிவன் இயக்கத்தில் பேய் படத்தில் மீண்டும் கதாநாயகனாக பாண்டியராஜன் நடிக்க உள்ளார்.

பிரபு, ரேவதி ஜோடியாக நடித்து 1985-ல் திரைக்கு வந்த கன்னிராசி படம் மூலம் டைரக்டராக அறிமுகமான பாண்டியராஜன் 'ஆண்பாவம்' படத்தை இயக்கி நடித்து முன்னணி நடிகராகவும் உயர்ந்தார். நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்தார். மனைவி ரெடி, கதாநாயகன், ஆயுசு நூறு, பாட்டி சொல்லை தட்டாதே, வாய் கொழுப்பு, தாய்க்குலமே தாய்க்குலமே உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். அதிக படங்களில் நகைச்சுவை கதாநாயகனாவே வந்தார்.

அஞ்சாதே படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். நிறைய படங்களை டைரக்டும் செய்துள்ளார். கதாநாயகன் வாய்ப்பு குறைந்த நிலையில் மற்ற நடிகர்கள் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பாண்டியராஜன் கடைசியாக ரஜினியுடன் நடித்த அண்ணாத்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் பாண்டியராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். திகில் கதையம்சத்தில் பேய் படமாக தயாராகும் இந்த படத்தை கார்த்திக் சிவன் டைரக்டு செய்கிறார்.

மேலும் செய்திகள்