< Back
சினிமா துளிகள்
சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டிய பா.ரஞ்சித்
சினிமா துளிகள்

சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டிய பா.ரஞ்சித்

தினத்தந்தி
|
21 Jun 2022 9:25 AM IST

சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சென்னை,

சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் நடிப்பில் விராட பர்வம் திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானது.

ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது நடிகை சாய்பல்லவி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இவரின் கருத்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் பெற்று வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் 'விராட பர்வம்' படம் குறித்து தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சமீபத்தில் நான் பார்த்த சிறந்த தெலுங்கு படம் 'விரத பர்வம்'. இயக்குனர் வேணு உடுகுலா, எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ராணா டகுபதிக்கு சிறப்பு பாராட்டுகள். சாய்பல்லவி சிறப்பாக நடித்துள்ளார்" என பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்