< Back
சினிமா துளிகள்
நிவேதா தாமசுக்கு பிடித்த உணவு
சினிமா துளிகள்

நிவேதா தாமசுக்கு பிடித்த உணவு

தினத்தந்தி
|
26 May 2022 9:31 AM GMT

"எனக்கு வீட்டில் சமைக்கும் உணவுகள்தான் பிடிக்கும்" என்றார் நிவேதா தாமஸ்.

தமிழில் குருவி, ஜில்லா, பாபநாசம், தர்பார் படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் மலையாளம், தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு பிடித்த உணவு குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து நிவேதா தாமஸ் அளித்துள்ள பேட்டியில் ''உணவு விஷயத்தில் எனக்கு வீட்டில் சமைக்கும் உணவுகள்தான் பிடிக்கும். என் அம்மாவின் கைப்பக்குவம் வேறு எங்குமே கிடைக்காது.

சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு அம்மா சமைக்கும் வீட்டு உணவுகள் என்றால் மிகவும் இஷ்டம். அவர் அனைத்துவித உணவுகளையும் அற்புதமாக தயாரித்து அசத்தி விடுவார். நட்சத்திர ஓட்டல்களில் சமைக்கும் உணவுகளை விட எனது வீட்டில் சமைக்கப்படும் உணவுகள் அற்புதமாக இருக்கும். நானும் சமைக்க கற்றுக் கொண்டேன். சிறப்பாக சமைக்கா விட்டாலும் ஓரளவு சமைக்க முடியும். நான் சமைத்த உணவை சாப்பிட்டவர்கள் யாரும் பெரிதாக குறை கூறவில்லை. சின்ன சின்ன சந்தோஷங்கள் இதன் மூலம் நிறைய கிடைக்கிறது'' என்றார்.

மேலும் செய்திகள்