டைரக்டராகும் நித்யாமேனன்
|நித்யாமேனன் டைரக்டராக தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழில் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, 180, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யாமேனன், தெலுங்கு, மலையாள திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். நித்யாமேனன் தயாரிப்பாளர்களை அவமதிப்பதாகவும், கதைகளில் தலையிட்டு மாற்றம் செய்யும்படி இயக்குனர்களை வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து அவர் கூறும்போது, "என்னிடம் 200 பேர் கதை சொன்னால் 4 அல்லது 5 கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். வழக்கமான படங்களில் நடிப்பது இல்லை. எனக்கு தெரிந்த விஷயங்களை தெரிவிப்பேன்" என்றார். ஸ்கைலாப் என்ற மலையாள படத்தை தயாரிக்கவும் செய்தார். இந்த நிலையில் நித்யாமேனன் அடுத்து டைரக்டராக தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து நித்யாமேனனிடம் கேட்டபோது, "எனக்கு டைரக்டராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. டைரக்டராவது பயனுள்ளதாக இருக்குமா என்று யோசிக்கிறேன். ஆனாலும் நான் டைரக்டராவது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்" என்றார்.