விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்
|இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே இவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரத்தம்' திரைப்படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.