< Back
சினிமா துளிகள்
வெளியானது ஜெய் படத்தின் புதிய அப்டேட்
சினிமா துளிகள்

வெளியானது ஜெய் படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
3 Aug 2022 11:37 PM IST

இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. 'எண்ணித் துணிக' திரைப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் "ஏனடி பெண்ணே" பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்