< Back
சினிமா துளிகள்
கவனம் ஈர்க்கும் சிம்பு படத்தின் புதிய அப்டேட்..
சினிமா துளிகள்

கவனம் ஈர்க்கும் சிம்பு படத்தின் புதிய அப்டேட்..

தினத்தந்தி
|
8 Sept 2022 10:20 PM IST

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் 'மல்லிப்பூ' பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் தாமரை வரிகளில் மதுஸ்ரீ பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்