< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
வெளியானது துல்கர் சல்மான் படத்தின் புதிய பாடல்
|3 Aug 2022 11:30 PM IST
இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இதில் துல்கருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.
இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகிவுள்ள இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் நான்காவது பாடல் வெளியாகியுள்ளது. கபில் கபிலன் மற்றும் சின்மயி ஸ்ரீபடா பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.