< Back
சினிமா துளிகள்
விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் புதிய போஸ்டர் வைரல்
சினிமா துளிகள்

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் புதிய போஸ்டர் வைரல்

தினத்தந்தி
|
24 Jun 2022 3:40 AM GMT

'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்