"மனம் கனத்து விட்டது "- விஜய் ஆண்டனிக்கு நடிகர் சிலம்பரசன் ஆறுதல்
|விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் "உங்கள் மகள் மறைந்த செய்தி அறிந்து மனம் கனத்துவிட்டது. சகோதரர் விஜய் ஆண்டனிக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் பிரார்த்தனைகள்" என்று பதிவிட்டுள்ளார்.