< Back
சினிமா துளிகள்

சினிமா துளிகள்
டிடிஎப் வாசன் நடிக்கும் படத்தின் அறிமுக பாடலை பாடுகிறார் இசையமைப்பாளர் அனிருத்

23 July 2023 7:10 PM IST
டிடிஎப் வாசன் நடிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அனிருத் பாட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை,
டிடிஎப் வாசன் நடிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில், டிடிஎஃப் வாசனின் அறிமுக பாடலை அனிருத் பாட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. யூ டியூபர் டிடிஎப் வாசன் மஞ்சள் வீரன் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இயக்குநர் செல்அம் இந்த படத்தை இயக்குகிறார். அண்மையின் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது படத்தில் டிடிஎப் வாசனின் அறிமுக பாடலை அனிருத் பாடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.