< Back
சினிமா துளிகள்
பட வாய்ப்பின்றி தவிக்கும் வில்லன் நடிகர் மொட்டை ராஜேந்திரன்
சினிமா துளிகள்

பட வாய்ப்பின்றி தவிக்கும் வில்லன் நடிகர் மொட்டை ராஜேந்திரன்

தினத்தந்தி
|
5 Aug 2022 2:58 PM IST

பட வாய்ப்புகள் இல்லாமல் மொட்டை ராஜேந்திரன் தவித்து வருகிறார். கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நடித்ததால் தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டோமோ என்று புலம்பி வருகிறார்.

சினிமாவில் 'ஸ்டண்ட்' கலைஞராக பணியாற்றி வந்த மொட்டை ராஜேந்திரனை, 'நான் கடவுள்' படத்தில் கொடூர வில்லனாக நடிக்க வைத்திருந்தார் டைரக்டர் பாலா. அதில் அவரது நடிப்பும் பாராட்டை பெற்றது. அதன்பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் மொட்டை ராஜேந்திரன் தவித்து வருகிறார். 'கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நடித்ததால் தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டோமோ... திறமைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தால் நன்றாக இருந்து இருக்கலாமோ' என அவர் புலம்பி வருகிறார்.

ஆரம்ப காலத்தில் பீடியும், டீயும் தான் சாப்பாடு என ராஜேந்திரன் இருந்துள்ளார். சினிமாவில் கதாநாயகர்கள், வில்லன்களுக்கு 'டூப்' போட்டுள்ளார். அவர்களுக்காக கூவத்தில் பல தடவை விழுந்து புரண்டிருக்கிறார். இதனால் முடியை இழந்து மொட்டை ராஜேந்திரன் ஆனார்.

தற்போது வாய்ப்புகள் தேடி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அலுவலகங்களை தேடி மொட்டை ராஜேந்திரன் செல்கிறாராம். 'இவருக்கா இந்த நிலைமை?' என திரையுலகினரும் வருத்தம் கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்