< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
பணம் இன்றிருக்கும் நாளை இருக்காது - பார்த்திபன் பதிவு
|23 May 2023 11:33 PM IST
நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர் பார்த்திபன். இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது புதிய படம் இயக்குவதில் பார்த்திபன் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், 2000 ரூபாய் மாற்றம் குறித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஆயிரமே இருந்தாலும்…. இன்றிருக்கும் நாளை இருக்காது-பணம்! மதிப்புமிகு மனம் காப்போம்" என்று இரண்டாயிரம் ரூபாய் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.