< Back
சினிமா துளிகள்
புதிய அப்டேட் கொடுத்த மோகன் ஜி
சினிமா துளிகள்

புதிய அப்டேட் கொடுத்த மோகன் ஜி

தினத்தந்தி
|
20 July 2022 11:36 PM IST

இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் பகாசூரன். இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடிக்கிறார்.

பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் போஸ்டரை செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும். இந்த படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

படத்தை பற்றியும் இயக்குனர் மோகன்ஜியை பற்றியும் செல்வராகவன் மற்றும் நட்டி இருவரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் தூண்டியுள்ளது. 'பகாசூரன்' திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்