< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
தமிழ் படங்களில் நடிக்க மீரா ஜாஸ்மின் ஆர்வம்
|5 Jun 2022 2:19 PM IST
மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்க முடிவு செய்திருக்கிறார்.
குண்டு கண்கள், துறுதுறு பேச்சு, குடும்ப பாங்கான முகத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். 'ரன்', 'புதிய கீதை', 'ஆஞ்சநேயா', 'ஆயுத எழுத்து', 'சண்டக்கோழி', 'திருமகன்', 'நேபாளி', 'மரியாதை', 'மம்பட்டியான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
2014-ம் ஆண்டு 'விஞ்ஞானி' என்ற படத்துக்கு பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை. ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே சிறப்பு தோற்றங்களில் நடித்து வந்தார்.
40 வயதாகும் மீரா ஜாஸ்மின், தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது கலக்கல் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.