< Back
சினிமா துளிகள்
மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது - இயக்குனர் மடோன் அஸ்வின்
சினிமா துளிகள்

"மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது" - இயக்குனர் மடோன் அஸ்வின்

தினத்தந்தி
|
15 July 2023 10:22 PM IST

மாவீரன் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் உற்சாகமாக பார்த்து ரசித்ததாக, இயக்குனர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், மாவீரன் திரைப்படத்தை ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்குகளில் பார்த்து ரசித்ததாக படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய படத்தை முதல் முறையாக திரையரங்கில் பார்க்கிறேன். ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக படத்தை பார்த்து ரசித்தனர். குறிப்பாக காமெடி காட்சிகளை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்