< Back
சினிமா துளிகள்
தொடர்ந்து அப்டேட்களை கொடுக்கும் மாவீரன் படக்குழு
சினிமா துளிகள்

தொடர்ந்து அப்டேட்களை கொடுக்கும் மாவீரன் படக்குழு

தினத்தந்தி
|
4 Aug 2022 11:34 PM IST

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ''மாவீரன்''. இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. "மாவீரன்" திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த அறிவிப்பை இன்று காலை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகை சரிதா இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்