< Back
சினிமா துளிகள்
மீண்டும் மதன்பாப்
சினிமா துளிகள்

மீண்டும் மதன்பாப்

தினத்தந்தி
|
31 March 2023 10:38 AM IST

தமிழில் 600 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள மதன்பாப், சொந்தத் தொழில் பிரச்சினை களால் கடந்த இரண்டு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது அவற்றை சரிசெய்து விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். பிரபுதேவாவின் `பஹிரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த `கோஷ்டி' படத்திலும் நடித்து இருந்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் மற்றும் சந்தானத்துடன் `கிக்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன.

மேலும் செய்திகள்