அடுத்த தலைமுறையை பாதுகாப்போம் - வைரலாகும் 'பகாசூரன்' படத்தின் டீசர்
|இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன். இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவனும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நட்டி நடித்துள்ளனர்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பகாசூரன்' படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் டீசர் வருகிற 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அறிவித்தபடி 'பகாசூரன்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நமது அடுத்த தலைமுறையை பாதுகாப்போம். நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகள் அவர்களின் பருவ வயதில் பாதுக்காப்புடன் வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.